மகளிர் உரிமைத் தொகை திட்ட நிதி சர்ச்சை - தேசிய பட்டியலின ஆணையத்தின் கடிதம்!

பட்டியலின மக்களுக்கான நிதியை தமிழக அரசு மகளிர் உரிமை திட்டத்திற்காக பயன்படுத்துகிறதா என விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு பட்டியலின ஆணையத்தின் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழக அரசின் தலைமை செயலர் மற்றும் ஆளுநரின் செயலர் உள்ளிட்டோர் 15 நாட்களில் விளக்கமளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சென்னை: பட்டியலின மக்களுக்கான நிதியை தமிழக அரசு மகளிர் உரிமை திட்டத்திற்காக பயன்படுத்துகிறதா என விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு பட்டியலின ஆணையத்தின் கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமை தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான, செப்.,15ல் துவக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, 7,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பட்டியலின மக்களுக்கான நிதியை மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக தமிழக அரசு மாற்றியுள்ளதாக இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுச்செயலர் அன்புவேந்தன், தேசிய பட்டியலின ஆணையத்தில், புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக, ஆணைய இயக்குனர் ரவிவர்மன், தமிழக அரசு, தலைமை செயலர் மற்றும் ஆளுநரின் தலைமை செயலருக்கு இதுதொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், 15 நாட்களுக்குள் தகுந்த ஆதாரங்களுடன், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, நீதிமன்றம் வாயிலாக சம்பந்தப்பட்டவர்கள், ஆணையம் முன் நேரில் ஆஜராக, 'சம்மன்' அனுப்பப்படும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...