கே.எஸ்.அழகிரி விரைவில் குணமடைய வேண்டி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சிறப்பு பூஜை!

சமீபத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட போது நிலை தடுமாறி விழுந்த காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி குணமடைய வேண்டி கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் தண்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.



கோவை: காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குணமடைய வேண்டி கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தண்டுமாரியம்மன் கோவிலில் à®šà®¿à®±à®ªà¯à®ªà¯ பூஜைகள் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி இரு தினங்களுக்கு முன்பு நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி கோவையில் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

மாநிலத் துணைத் தலைவர் அழகு ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் பாலாபிஷேகம், உள்ளிட்ட பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் வழக்கறிஞர் செந்தில் குமார் உட்பட பல்வேறு நிர்வாகிகள் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...