தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு - கோவை அரசு கலைக் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திரும்ப பெற வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோவை அரசு கலைக் கல்லூரி முன்பு பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜாயிண்ட் பாரம் ஆப் மூவ்மெண்ட் ஆப் எஜுகேஷன் (jfme) என்பது பல்வேறு ஆசிரியர் அமைப்புகள், ஓய்வு பெற்றோர் அமைப்புகள், மாணவர் வாலிபர் அமைப்புகள் இணைந்து உயர்கல்வியின் வளர்ச்சிக்காக இந்திய அளவில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். அகில இந்திய அமைப்பின் இணைந்துள்ள உறுப்பு சங்கங்கள் கோரிக்கை அட்டை அணிந்து பேராசிரியர்கள் கல்லூரி வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய கோரிக்கையாக தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திரும்ப பெற வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு 11.1.21 அன்று வெளியிட்ட அரசாணை எண் 5 முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...