உலக தாய்ப்பால் வாரம் - கோவையில் மருத்துவர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் பேரணி!

ஆகஸ்டு முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, தாய்ப்பால் ஊட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் மருத்துவர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட பேரணியை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



கோவை: உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பந்தய சாலையில் உள்ள டவரில் இருந்து மாசாணி மருத்துவமனை வரை செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.



இந்த பேரணியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது,



ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாய்மார்கள் பாலூட்டும் முக்கியத்துவத்தை உணரக்கூடிய வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தையின் உடலில் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதற்கு தாய்ப்பால் மிகவும் உதவியாக இருக்கிறது. மாசாணி மருத்துவமனை மற்றும் இன்னர் வீல் கிளப் கல்லூரி மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

தாய்ப்பால் ஊட்டுவதின் முக்கியத்தை எடுத்து சொல்லக் கூடிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த பேரணியில் தாய்ப்பால் தேவையுள்ள குழந்தைகளுக்கு நன்கொடை வழங்கக்கூடிய தாய்மார்கள் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த பேரணி அமைக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால் கெட்டு விடக்கூடாது என்பதை பேணி காப்பதற்கு குளிர்சாதன வசதி மருத்துவமனை வழங்குகின்றனர். கோவை மாநகரில் பாலூட்டுவதற்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலும் காவல்துறையில் உள்ள தாய்மார்கள் பெண் காவலர்கள் தாய்ப்பாலை நன்கொடையாக வழங்குவதற்கு விருப்பம் உள்ளவர்கள் அவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...