கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துக - திருப்பூரில் அமமுக, ஓபிஎஸ் அணியினர் ஆர்ப்பாட்டம்!

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.



திருப்பூர்: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி திருப்பூரில் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து ஆட்சி பொறுப்பேற்று 90 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திமுக இரண்டரை ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.



மேலும், கோடநாடு பங்களாவில் நடைபெற்ற மர்ம சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநகராட்சி மேயர் விசாலாட்சி, முன்னாள் அமைச்சர் சண்முகவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...