கோவை பி.எஸ்‌.ஜி கல்லூரியில் போதைப்பொருள்‌ எதிர்ப்பு, விழிப்புணர்வு குறும்பட போட்டி!

கோவை பி.எஸ்‌.ஜி கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள்‌ எதிர்ப்பு, விழிப்புணர்வு குறும்பட போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த குறும்பட இயக்குனர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.


கோவை: கோவை பி.எஸ்‌.ஜி கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள்‌ எதிர்ப்பு, விழிப்புணர்வு குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகர காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

கோவையில் உள்ள பி.எஸ்‌.ஜி. கலை அறிவியல்‌ கல்லூரியில்‌ போதைப்பொருள்‌ எதிப்பு மற்றும்‌ விழிப்புணர்வு குறும்பட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது விழாவில்‌ கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ பாலகிருஷ்ணன்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஆகியோர் கலந்து கொண்டு, போட்டியில்‌ வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருதுகள்‌ வழங்கி, பாராட்டு தெரிவித்தனர்‌.



இந்நிகழ்ச்சியில்‌ போதைப்பொருள்‌ எதிர்ப்பு மற்றும்‌ விழிப்புணர்வு குறும்பட போட்டிகளில்‌ ஒரு பக்கம்‌ உதடு ஒரு பக்கம்‌ நெருப்பு என்ற தலைப்பின்‌ குறும்படத்திற்காக திருச்சி, செயின்ட்‌ ஜோசப்‌ கல்லூரியின்‌ மாணவர்‌ குறும்பட இயக்குநர் யுஜேஸ்‌ முதல்‌ பரிசும், இரண்டாம்‌ பரிசு, இல்ல வேண்டாம்‌ என்ற தலைப்பிற்காக பி.எஸ்‌.ஜி. கலை அறிவியல்‌ கல்லூரி மாணவாகள்‌ குறும்பட இயக்குநர்‌ ௮ர்ஹான்‌, அ.'.ப்சர் ஆகியோருக்கும்‌, மூன்றாம்‌ பரிசு பி.எஸ்‌.ஜி. தொழில்நுட்ப கல்லூரி மாணவர்‌ குறும்பட இயக்குநர்‌ சர்வேஷ்‌ பொன்னுசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில்‌ பி.எஸ்‌.ஜி.கல்லூரி செயலாளர்‌ மரு.டி. கண்ணையன்‌, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு பிரிவு ஆலோசகா மரு.சரண்யா, துறைத்தலைவா்‌/காட்சித்துறை ராதாகுருசாமி, துணை முதல்வர்கள்‌ மரு.ஜெயந்தி, மரு.௨மாராணி மற்றும்‌ 1000க்கும்‌ மேற்பட்ட மாணவ, மாணவிகள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...