தாராபுரம் அருகே 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயம் - விபத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!

தாராபுரம் அடுத்த கொங்கனாபுரம் பிரிவு அருகே இன்னோவா காரின் டயர் வெடித்ததில், கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு கார் மீதி பயங்கரமாக மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: தாராபுரத்தில் 2 கார்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையை சேர்ந்த கிருபாகரன் (24) சஞ்சய் (24) ஆகியோர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் உறவினரான சந்திரன் (60) என்பவருடன் காரில் மதுரையில் இருந்து கோவை நோக்கி தாராபுரம் வழியாக நான்கு வழிச்சாலையில் கோனாபுரம் பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த இனோவா காரில் தாராபுரத்தில் சுகம் விதை பண்ணை நடத்தி வரும் ஆத்துக்கால்புதூரை சேர்ந்த விஜயகுமார் (35) மற்றும் சிவகுமார் (42) ஆகியோர் கோனாபுரம் பிரிவு என்ற இடத்தில் எதிர்நோக்கி வந்துள்ளனர்.



இந்த நிலையில், இன்னோவா காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததில் கார், சாலையின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு எதிர் திசையில் சென்று கொண்டிருந்த காரின் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது.



இரண்டு கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் இரு கார்களிலும் பயணித்த ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.



காயம் அடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் மீட்கப்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.



அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூர் மருத்துவமனைகளுக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.



இந்நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...