வால்பாறையில் குப்பையை சுத்தம் செய்த நகர மன்ற துணைத் தலைவர் - பொதுமக்கள் பாராட்டு!

வால்பாறையில் உள்ள 11வது வார்டில் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபடாததால், அந்த வார்டு உறுப்பினரும் நகர மன்ற துணை தலைவர் செந்தில் குமார் தூய்மை பணியில் ஈடுபட்ட நிலையில், இதனை கண்ட பொதுமக்கள் அவரை பாராட்டினர்.



கோவை: வால்பாறையில் 11 வது வார்டில் தூய்மை பணியில் ஈடுபட்ட நகர மன்ற துணை தலைவர் செந்தில் குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் 21 வார்டுகள் உள்ளன. 21 வார்டுகளில் ரொட்டிக்கடை, சோலையார் அணை, வால்பாறை டவுன், வால்பாறை டவுன் தெற்கு பகுதி, முடிஸ் பஜார் ஆகிய வார்டுகளில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்று தூய்மை பணியை செய்வது வழக்கம்.

மற்ற வார்டுகளில் எஸ்டேட் நிர்வாகங்கள் மற்றும் வாரம் ஒரு முறை தூய்மை பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்று தூய்மை பணிகளை செய்து வருகின்றனர். வால்பாறை நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் இவர் 11 வது வார்டு உறுப்பினர் ஆவார்.

11 வது வார்டுக்கு உட்பட்ட கூட்டுறவு காலனி, துளசிங்க நகர், காமராஜர் நகர், காந்தி நகர், போன்ற பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை வாங்கி வருவதும் அப்பகுதியில் தூய்மைப் பணிகளை செய்து வருவதும் வழக்கம்.

கடந்த சில தினங்களாக 11வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை எடுக்க வருவதில்லை என்றும் குப்பை எடுக்க கூறியும் தூய்மை பணியாளர்கள் பணிகளை செய்வதில்லை என்றும் பொது மக்களிடமிருந்து நகர மன்ற துணை தலைவர் செந்தில்குமாருக்கு பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

நகர மன்ற துணைத் தலைவர் தூய்மை பணியாளர்களிடம் பலமுறை கூறியும் கூட்டுறவு காலனி, அஞ்சலகம், அருகில் தூய இருதய மேல்நிலைப்பள்ளி முன்பும், காமராஜர் நகர் பகுதியில் குப்பைகளை எடுக்க வில்லை. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பள்ளி குழந்தைகள் மற்றும் அப்பகுதியில் செல்லும் மக்கள் அவதி பட்டு வருகின்றனர்.



இதனால் அஞ்சலக பகுதியில் நகர மன்ற துணை தலைவர் குப்பைகளை சுத்தம் செய்து செய்தார்.



இது பொதுமக்கள் அனைவரும் பார்த்து பாராட்டினர்.



இச்சம்பவம் அறிந்து நகராட்சி ஊழியர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து நாங்கள் வேலை செய்து கொள்கிறோம் என்று கூறி சுத்தம் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...