குண்டத்து மாகாளியம்மன் கோவில் ஆடி குண்ட திருவிழா - ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்!

கோவை குறிச்சியில் உள்ள குண்டத்து மாகாளியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவையொட்டி, நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். பின்னர் மாகாளியம்மன் கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கோவை: கோவை குண்டத்து மாகாளியம்மன் கோவில் ஆடி மாத திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவை குறிச்சி பகுதியில் உள்ள குண்டத்து மாகாளியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாத பூஜைகள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் ஆடி மாதத்தை முன்னிட்டு குண்டம் இறங்கும் திருவிழா முக்கிய நிகழ்வாக அமையும்.

அதன்படி இந்த ஆண்டும் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பொங்காளியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகங்கள் புறப்பட்டு மாகாளியம்மன் கோவிலை வந்தடைந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம் வந்தனர்.



பின்னர் மாகாளியம்மன் கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...