உடுமலை அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாக்கி விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்!

உடுமலை அடுத்த பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஹாக்கி விளையாட்டில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக சமூக ஆர்வலர் வாயிலாக 50,000 ரூபாய் மதிப்புள்ள ஹாக்கி விளையாட்டுக்கான ஹாக்கி ஸ்டிக், காலணி, கால் உரைகள், கோல் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலை அடுத்த பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக ரூ.50,000 மதிப்பிலான ஹாக்கி விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் பல்வேறு வழிகளில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமூக ஆர்வலர் வாயிலாக 50,000 ரூபாய் மதிப்புள்ள ஹாக்கி விளையாட்டுக்கான ஹாக்கி ஸ்டிக், காலணி, கால் உரைகள், கோல் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தலைமையாசிரியர் கார்த்திகேயன் உபகரணங்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...