திருப்பூரில் இந்துக்களின் சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட போவதாக பாஜக மனு!

திருப்பூரில் இந்துக்களின் சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும் அதனை அகற்றி தரவில்லை எனில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆடி அமாவாசை அன்று படையலிட்டு திதி கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக பாஜகவினர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூரில் இந்துக்களின் சுடுகாடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை மீட்டு தராமல் உள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட போவதாக மாநகராட்சி அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டி அம்மன் துறை பகுதியில் உள்ள இந்துக்களின் சுடுகாடு சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு புதைக்கப்பட்டவர்களுக்கு திதி கொடுக்கச் சொல்லும்போது முகம் சுழிக்கும் வகையிலான செயல்பாடுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பக்கத்தில் உள்ள இறைச்சி கடைக்காரர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளை அங்கேயே வெட்டுவதால் வழிபாடு செல்வதற்கு இடையூறாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.



எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும் எனவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

போர்க்கால அடிப்படையில் அதனை சரி செய்து தரவில்லை எனில் ஆடி அமாவாசை தினத்தன்று மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மாநகராட்சி அலுவலகத்திலேயே படையலிட்டு திதி கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.



மேலும் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்வதற்கு ஏற்ற வகையில் வெண்கல அம்பேத்கர் சிலை அமைத்து தரவேண்டும் என வலியுறுத்தியும் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சியினர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...