தாராபுரம் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்திய 9 லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்!

தாராபுரம் அடுத்த பழனிரோடு அருகே அனுமதியின்றி 5 கோடி மதிப்பிலான செம்மண் ஏற்றிச் சென்ற 9 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த நிலையில் லாரிகளை கைப்பற்றிய வருவாய் துறையினர், அதனை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே செம்மண் கடத்திச் சென்ற கேரளாவை சேர்ந்த 9 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் கேரளாவை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் உரிய அனுமதியின்றி சேம்பர்களுக்கு பர்மிட் இல்லாமலும், அதிக பாரத்துடன் செம்மண் லாரிகள் இயக்கப்படுவதாக பொதுமக்களிடம் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனிடையே, கடந்த 2 தினங்களுக்கு முன்பு வட்டார போக்குவரத்து அலுவலர் கேரளா மாநில லாரிகளை பிடித்து பறிமுதல் செய்துள்ளார்.



இந்நிலையில் தாராபுரம் பழனிரோடு நளினி காலேஜ் ரவுண்டானா அருகே உரிய அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்த 9‌ கேரளா மாநில லாரிகளை பொதுமக்கள் தடுத்து சிறைபிடித்தனர்.



பின்னர் இதுகுறித்து தாராபுரம் வட்டாட்சியருக்கும் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர்.



விதிமுறைக்கு புறம்பாக செம்மண் லோடு ஏற்றிவந்த 9 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தாராபுரம் நகர வருவாய் ஆய்வாளர் சரவணன் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்பது லாரிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...