தாராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் கொள்ளை - மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலை!

தாராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து வீட்டினுள் நுழைந்த மர்ம ஆசாமிகள் பீரோவில் வைத்திருந்த தங்க கம்மல், செயின் உள்பட 7 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற நிலையில், மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தாராபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து வீட்டினுள் நுழைந்த மர்ம ஆசாமிகள் பீரோவில் வைத்திருந்த தங்க கம்மல், செயின் உள்பட 7 பவன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் கூறியிருப்பதாவது, தாராபுரம் அருகே சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.டி.ஐ ஆசிரியரான பாலதண்டபாணி, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல்நலம் குறைவால் இறந்து விட்டார்.

இவர் மறைவுக்கு பிறகு இவருடைய மனைவி மீராராணி (53) இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். கடந்த ஆண்டு மீராராணி தனது இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்தது வைத்து இருவரையும் கோவையில் குடி வைத்து வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மீராராணி தாராபுரத்தில் தனியாக வசித்து வந்த போது உடல்நலம் குறைவு ஏற்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர்.



இந்நிலையில், தனது சொந்த வீடான தாராபுரம் சுப்பிரமணியபுரத்துக்கு கடந்த 3-ந் தேதி இரவு வீட்டுக்கு வந்த போது இவருடைய வீட்டின் முன் கதவு மற்றும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பீரோவில் வைத்திருந்த 5 ஜோடி தங்க கம்மல், 4 பவுன் தங்க செயின் உள்பட மொத்தம் 7 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.



சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...