கோவையில் அழகுசாதன பொருட்கள் கடையில் திடீர் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை கடையில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு மளமளவென பரவிய நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.


கோவை: கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை கடையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

கோவை கிராஸ்கட் ரோடு, ராஜாஜி சாலையில் உள்ள காஸ்மெட்டிக் கடை ஒன்றின் கீழ் தளத்தில் அதிகாலை 4 மணியளவில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி தலைமையிலான கோவை தெற்கு தீயணைப்பு துறையினர் இரண்டு வாகனங்களில் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



சிறிது நேரத்தில் கடையின் முதல் தளத்திலும் தீ பரவியதால், மீண்டும் பணிகள் துரிதபடுத்தப்பட்டு சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இச்சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...