தக்காளியின் வரத்து அதிகரிப்பு - திருப்பூரில் தக்காளி விலை ரூ.60 வரை சரிவு!

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் தக்காளி கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், தக்காளி வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக தற்பொழுது பாதிக்கு பாதியாக குறைந்து 60 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வரும் காலங்களில் தக்காளியின் விலை தொடர்ந்து சரியும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை பாதிக்கு பாதியாக சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தக்காளியின் விலை புதிய உச்சத்தை எட்டியிருந்தது. ஒரு கிலோவின் விலை 100 முதல் 180 வரை உயர்ந்த வண்ணம் இருந்தது.

தக்காளியின் வரத்து குறைந்த காரணத்தினாலேயே விலையானது புதிய உச்சத்தை எட்டியது. இதன் காரணமாக தக்காளியின் விலையை பொதுமக்கள் தங்கத்துடன் ஒப்பிட்டு பேசியதும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருந்தது.

இதனிடையே பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு நியாய விலை கடைகளில் தக்காளி ஒரு கிலோ அறுபது ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

தொடர்ந்து விளைச்சலை அதிகப்படுத்தி தக்காளியின் விலையை குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதன் காரணமாக தற்பொழுது தக்காளியின் விளைச்சல் அதிகரிக்க துவங்கியுள்ளதால் அதன் விலையும் சரிய தொடங்கியுள்ளது.



தக்காளிக்கு அதிக விலை கிடைக்கும் என்ற ஆர்வத்தில் விவசாயிகள் இதனை அதிக அளவில் பயிரிட்டுள்ளதால் தற்பொழுது மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் தக்காளி வரத்துவங்கியுள்ளதால் இதன் விலை குறைந்து வருகிறது.

குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம், தென்னம்பாளையம் மார்க்கெட் பல்லடம் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் 12 கிலோ எடை கொண்ட டிப்பர் 1200 ரூபாய்க்கும், 24 கிலோ எடை கொண்ட டிப்பர் 2500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.



தற்பொழுது வரத்து அதிகரித்துள்ளதால் 12 கிலோ எடை கொண்ட டிப்பர் 600 முதல் 800 வரையும், 24 கிலோ எடை கொண்ட டிப்பர் 1200 முதல் 1400 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக தக்காளியின் விலை இன்றைய நாளில் கிலோ 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வரும் காலங்களிலும் இதன் விலை மேலும் சிறிய தொடங்கும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...