நொய்யல் ஆறு சாய மற்றும் மருத்துவ கழிவுகளால் பாதிப்பு - மாசடைந்த நீருடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!

திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றின் நீரானது சாயக் கழிவுகளாலும் மருத்துவ கழிவுகளாலும் பாதிப்படைந்து உள்ளதாக விவசாயிகள், மாசடைந்த நீருடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பிய பின், ஆட்சியர் கிறிஸ்துராஜிடம் மனு அளித்தனர்.



திருப்பூர்: சாய கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளால் நொய்யல் ஆறு மாசடைந்துள்ளதாக கூறி, மாசடைந்த நீருடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றின் நீரானது சாயக் கழிவுகளாலும் மருத்துவ கழிவுகளாலும் பாதிப்படைந்து உள்ளதாக விவசாயிகள், மாசடைந்த நீருடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னலாடை தொழில் மூலமாக உலக அளவில் பெயர் பெற்ற ஊர் திருப்பூர். லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வந்தாரை வாழ வைக்கும் நகராக திருப்பூர் விளங்கி வருகிறது.

தமிழகத்தின் பிறமாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் வெளிமாநில மக்களுக்கும் வாழ்வளிக்கும் ஊராக விளங்கி வருகிறது. பின்னலாடை தொழில் மூலமாக உள்நாடு, வெளிநாட்டு வர்த்தகம் மூலமாக ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.

ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள உள்ளாடைகள் உற்பத்தியாகின்றன. இப்படி சிறப்பு வாய்ந்த திருப்பூர் மாநகரை சுற்றியும் நொய்யல் ஆற்றின் கிளைகள் பறந்து விரிந்து செல்லுகின்றன.

கோவை மாவட்டத்தில் தொடங்கி திருப்பூர், ஈரோடு வழியாக கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆறு 158 கிலோமீட்டர் பயணிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சாய, சலவை பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் காரணமாக நொய்யல் ஆற்று தண்ணீர் மாசு அடைந்த நிலையில் அதனை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கடந்த சில நாட்களாக நொய்யல் நீரில் சாயக் கழிவுகளும், மருத்துவக் கழிவுகளும் அதிக அளவில் மசடைந்து வருவதாகவும் இது குறித்து அதிகாரிகள் பலரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.



இதன் காரணமாக மாசடைந்த நொய்யல் நீருடன் விவசாயிகள், மற்றும் நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...