உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சரிவு - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

உடுமலை சந்தையில் கடந்த வாரங்களில் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.1800 வரை விற்பனையான நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பின் காரணமாக தரத்தை பொறுத்து தக்காளி பெட்டி ரூ.500 முதல் 900 வரை மட்டும் விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



திருப்பூர்: தக்காளி வரத்து அதிகரிப்பின் காரணமாக உடுமலை சந்தையில் தக்காளி விலை பாதியாக குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சந்தையில் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.1800 வரை விற்பனையான நிலையில் தற்போது வரத்து அதிகரிப்பால் விலை பாதியாக குறைந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, உடுமலை சுற்றுவட்டார பகுதியில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும் பெரும்பாலான நேரங்களில் உரிய விலை கிடைக்காமல் இழப்பை சந்திக்கும் நிலையே இருந்து வந்தது.



இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் 14 கிலோ எடை கொண்ட வெட்டி தக்காளி 1800 ரூபாய் வரை விலை போனது அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்பொழுது உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகமாக இருப்பதால் தரத்தை பொறுத்து தக்காளி பெட்டி ரூ.500 முதல் 900 வரை மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் குடும்ப பட்ஜெட்டில் தக்காளி உள்ளிட்ட காய்கறி காய்கறிகளுக்கு பெரும் தொகை ஒதுக்க வேண்டிய நிலை உள்ளதாக வேதனைப்பட்டு வந்த இல்லத்தரசிகள் தக்காளி விலை குறைவால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...