மணிப்பூர் கலவரம் - கோவையில் கிறிஸ்துவ அமைப்பு சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது

மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமையை கண்டித்து கோவை சுங்கம் பகுதியில் உள்ள பிஷப் அம்ரோஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள கிறிஸ்தவ அமைப்பான புது வாழ்வு மாநகர பேராலயம் சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது.


கோவை: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கோவை சுங்கம் அருகே கிறிஸ்துவ அமைப்பான புது வாழ்வு மாநகர பேராலயம் சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது.

மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இரு தரப்பினர் இடையே கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து உள்ளதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதனிடையே மணிப்பூரை சேர்ந்து இரு பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மணிப்பூரில் நிலவும் இந்த கலவரத்திற்கு பாஜக அரசு தான் காரணம் என கூறி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை சுங்கம் பகுதியில் உள்ள பிஷப் அம்ரோஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள கிறிஸ்தவ அமைப்பான புது வாழ்வு மாநகர பேராலயம் சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது.

இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...