உலக தாய்ப்பால் வாரம் - விழிப்புணர்வு ஏற்படுத்திய செவிலியர்கள்!

கோவை ESI மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, INNER WHEEL CLUB-ன் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், செவிலியர்கள் கலந்து கொண்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை: உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவையில் INNER WHEEL CLUB-ன் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக இன்றைய தினம் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறது.



கோவை ESI மருத்துவமனையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோவை IWC, கோவை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு IWC, கோவை சினெர்ஜியின் IWC உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டு மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம், அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் இந்நிகழ்வில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்தான பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கினர்.



அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இதில் ஏராளமான ஒரு கலந்து கொண்டு தாய்ப்பால் வாரம் குறித்தும் தாய்ப்பாலின் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.



இந்நிகழ்வில் மருத்துவமனை செவிலியர்கள் சினிமா பாடல்களுக்கு நடனமாடி உற்சாகப்படுத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...