போத்தனூர் அருகே சாலையில் சரியாக மூடப்படாத பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து - பொதுமக்கள் அதிர்ச்சி!

கோவை - போத்தனூர் சாலையில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாமல் இருந்த நிலையில் இன்று, அவ்வழியாக சென்ற அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் சிக்கியதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர்.


கோவை: போத்தனூர் அருகே சாலையில் சரியாக மூடப்படதாக பள்ளத்தில் அரசு பேருந்து சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலை பராமரிப்பு பணிகள் மற்றும் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை - போத்தனூர் பகுதி ரயில்வே மண்டபம் அருகில் குழாய்கள் பதிப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது.

இந்நிலையில் அந்த பள்ளம் சரிவர மண்ணை கொண்டு மூடாமல் இருந்ததாக தெரிகிறது. இதனிடையே அவ்வழியாக போத்தனூரில் இருந்து துடியலூர் செல்லும் அரசு பேருந்து ஒன்று அந்த பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.

பேருந்தின் முன்பக்க ஒரு சக்கரம் பாதிக்கும் மேல் பள்ளத்தில் சிக்கி கொண்டது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு வேறு பேருந்திற்கு மாற்றி விடப்பட்டனர்.

தொடர்ந்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கொண்டு பேருந்து குழியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பேருந்து குழியில் இருந்து வெளியில் எடுத்தவுடன் காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...