சீத்தாப்பழத்தில் 20க்கும் மேற்பட்ட தேசத் தலைவர்கள் படங்களை வரைந்து அசத்திய கோவையை சேர்ந்த நகை வடிவமைப்பாளர்!

கோவை குனியமுத்தூரை சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளரான யூ.எம்.டி.ராஜா என்பவர், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சீத்தாப்பழத்தில், மகாத்மா காந்தி, கட்டபொம்மன், காமராஜர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தலைவர்களின் படங்களை வரைந்து அசத்தியுள்ளார்.


கோவை: கோவையை சேர்ந்த நகை வடிமைப்பாளர் ஒருவர், ஒரு சீத்தாப்பழத்தில் 20க்கும் மேற்பட்ட தேசத் தலைவர்கள் படங்களை வரைந்து அசத்தியுள்ளார்.



கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் யூ.எம்.டி.ராஜா, தங்க நகை வடிவமைப்பாளராக பணி செய்து வரும் இவர் அரிசி, மாங்கனி, முட்டை ஓடு, சோப்பு, மெழுகு உள்ளிட்டவையில் வித்தியாசமான முறையில் படங்களை வரைவதில் வழக்கமாக கொண்டுள்ளார்.



இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தேச தலைவர்களை போற்றும் விதமாக கனிந்தவர்கள், முதிர்ந்தவர்கள், இனிமையானவர்கள் என்பதை உணர்த்தி சீத்தாப்பழத்தில் அவர்களது படத்தை துல்லியமாக வரைந்து அசத்தியுள்ளார்.



சீதாப்பழத்தில் உள்ள கணுவில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், ராஜேந்திர பிரசாத், பாரதியார்,நேரு, வேலு நாச்சியார், அம்பேத்கர், அப்துல் கலாம், வீரபாண்டிய கட்டபொம்மன், காமராஜர் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட தேசத் தலைவர்களின் படங்களை பல வண்ணங்களில் வரைந்துள்ளார்.



சுமார் 12 மணி நேரத்தில் தேச தலைவர்களின் படங்களை வரைந்த யூ.எம்.டி.ராஜாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...