உக்கடம் அருகே மேம்பால பணிக்காக கடைகளை இடிக்க முயற்சி - எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தீடீர் மறியல்!

உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே நடைபெற்று வரும் மேம்பால பணிக்காக பொள்ளாச்சி சாலையிப் இடப்புறம் உள்ள கடைகளை இடிக்க முயன்ற நெடுஞ்சாலை துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: உக்கடம் அருகே மேம்பால பணிக்காக கடைகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே சுமார் 2.4 கிலோமீட்டர் தூரத்துக்கு மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.



இதனால் ஆத்துப்பாலத்தில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்கு திரும்பும் சாலையில் இடப்புறத்தில் உள்ள கடைகளை இடிப்பதற்கு இன்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அங்கு சென்றனர்.



அப்போது கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் அப்பகுதியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதனால் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...