மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உடுமலையில் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்தும், உள்துறை அமைச்சர் பதவி விலகக் கோரியும், உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு மக்கள் விடுதலை முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு மக்கள் விடுதலை முன்னணி சார்பில் மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்து உள்துறை அமைச்சர் பதவி விலகக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய அமைப்பாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ஈஸ்வரன், கேரள மாநில அமைப்பாளர் சிவன் குட்டி, மாநில ஒருங்கிணைப்பாளர் ராசு, உடுமலை ஒன்றிய செயலாளர் மணிகண்டன், தென்னை தொழிலாளர் முன்னணி பாலகிருஷ்ணன்.

விடுதலை மக்கள் முன்னேற்ற தெற்கு திருப்பூர் மாவட்ட சிறப்பு விருந்தினராக மாநில பொறுப்பாளர் விடுதலை மணி, நகர பொறுப்பாளர் சக்திவேல், ஒன்றிய செயலாளர் தம்பி மகாலிங்கம், ஒன்றிய துணைச் செயலாளர் வி.சி.கே கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...