மீன் வாங்கினால் தக்காளி இலவசம் - வாடிக்கையாளர்களை கவரும் மீன் கடை!

கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் கடை நடத்தி வரும் ஜாபர் என்பவர் தனது கடைக்கு மீன் வாங்குவோர்க்கு கால் கிலோ தக்காளியை இலவசமாக வழங்கி வருகிறார். இந்த சலுகை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், இது இன்றும் நாளையும் மட்டுமே கிடைக்கும் என அறிவித்துள்ளார்.


கோவை: உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கினால் தக்காளி இலவசமாக கிடைக்கும் என்று ஜாபர் என்பவர் அறிவித்துள்ளது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதுகுறித்து மீம்ஸ் மற்றும் காமெடி பதிவுகளை வலைதள வாசிகள் பகிர்ந்து வருகின்றனர். கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கூட மணமக்களுக்கு தக்காளி அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.

பருவநிலை மாற்றம் மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை அதிகரித்து வருவதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தக்காளியை அரசாங்கமே நேரடியாக கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.



இந்நிலையில் கோவையில் மீன் கடை நடத்தி வருபவர் அவரது கடையில் மீன் வாங்குவோர்க்கு இலவசமாக கால் கிலோ தக்காளியை வழங்கி வருகிறார். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இன்றும், நாளையும் மீன் வாங்குபவர்களுக்கு தக்காளியை இலவசமாக கொடுப்பதாகவும் ஜாபர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...