வால்பாறையில் உலக பழங்குடியினர் தின விழா - உற்சாகமாக கொண்டாட்டம்!

வால்பாறையில் பழங்குடியின மக்கள் சார்பில் நடைபெற்ற உலக பழங்குடியினர் தின விழா பாரம்பரிய இசையுடன், ஆடல், பாடல் என உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினர்களாக வனச்சரகர்கள் மணிகண்டன், வெங்கடேஷ் மற்றும் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.



கோவை: வால்பாறையில் உலக பழங்குடியினர் தினம் முன்னிட்டு பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசையுடன், ஆடல், பாடல் என உற்சாகமாக கொண்டாடினர்.

வால்பாறை சுற்றுவட்டார வனப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இங்கு சுமார் 1000க்கும் மேல் மக்கள் உள்ளனர்

கோவை மாவட்டம் வால்பாறையில் உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு வால்பாறையில் பழங்குடியினர் மக்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வால்பாறை நகராட்சியில் உள்ள பழங்குடியின மக்கள் ஒன்று சேர்ந்து இந்த விழாவை நடத்தினர்.

இந்த விழாவில் வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வெங்கடேஷ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.



மேலும் வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி கலந்து கொண்டார்.



முன்னதாக குத்து விளக்கு ஏற்றி வைத்து விழாவை துவங்கி வைத்தனர்.



இதனையடுத்து, பழங்குடியின மக்கள் தங்களின் பாரம்பரிய இசை எழுப்பி நடனமாடி, பாட்டுப்பாடி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.



இந்நிலையில், வால்பாறை பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வனப்பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு தேவையான மின்சார வசதி சாலை வசதி மற்றும் அரசாங்கம் வழங்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று பழங்குடி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...