மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உடுமலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் உப்பு சத்தியகிரக போராட்டம்!

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஓன்றிய அரசை கண்டித்து திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உப்பு சத்திய கிரக போராட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



திருப்பூர்: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து உடுமலை ரயில் நிலையம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் உப்பு சத்திய கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய ஓன்றிய அரசை கண்டித்து உப்பு சத்திய கிரக போராட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்தில் ஓன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



மேலும், மேடையின் முன்பு உப்பு பாக்கெட்டுகள் வைக்கபட்டிருந்தன. இந்த போராட்டத்திற்கு பிறகு மாநில செயலாளர் பாஸ்கரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

மணிப்பூர் கலவரம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதற்கு முழு பொறுப்பு ஒன்றிய அரசு தான். இந்தியா கூட்டணியில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் மற்றும் தமிழக முதல்வர் அனைவருக்கும் மகளிர் உரிமைத்துறை கிடைக்க உரிய வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



இந்த நிகழ்வில், முன்னாள் பாடநூல் வாரிய தலைவர் லியாக்த் அலிகான், மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் அப்பாஸ், திருப்பூர் தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், உடுமலை நகர அமைப்பாளர் சக்திவேல், வழக்கறிஞர் பெரியார்தாசன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரேஸ்கோர்ஸில் மக்களுடன் நடைபயணம்: வாக்காளர்களின் குறைகளை கேட்டறிந்த AIADMK வேட்பாளர் அர்ஜுனன்

தீவிர தேர்தல் பணிகளுக்கு மத்தியில் AIADMK வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயணம் மேற்கொண்டு மக்...

“தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு” – கருப்புக்கொடி ஏற்றிய செந்தில் பாலாஜி..!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றி திமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கரூரி...

தொண்டாமுத்தூர் தொகுதி அலுவலகத்தில் Delimitation எதிர்ப்பு: திமுக கருப்புக்கொடி போராட்டம்

கோயம்புத்தூர் தொண்டாமுத்தூரில் மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகிகள்...

சிங்காநல்லூரில் ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.10.18 கோடி தங்கம், வைர நகைகள் பறிமுதல்

சிங்காநல்லூர் தொகுதியில் உள்ள கொடிசியா பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஏப்ரல் 15ம் தேதி வேனில் ஆவணமின்றி கொண்ட...

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் தேர்தல் பயிற்சி வகுப்பு ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026க்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Pra...

தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி போராட்டம்

Coimbatore மாவட்டத்தில் ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கள் வீட...