கோவை நிர்மலா கல்லூரியில் தேசிய பெண்கள் தினவிழா - மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பங்கேற்பு!

கோவை நிர்மலா கல்லூரியில் தேசிய பெண்கள் தினவிழாவில் கலந்து கொண்ட மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை போலீஸ் அக்கா செயலி மூலம் தீர்க்க பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.



கோவை: போலீஸ் அக்கா செயலி மூலம் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க ஒரு வருடமாக மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மாநகர காவல் ஆணையர் பாலக்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை நிர்மலா கல்லூரியில் நடைபெற்ற தேசிய பெண்கள் தினவிழா நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் உமாமகேஸ்வரி, பாத்திமா சிரியா புஷ்பம் ஆகியோருக்கு சிறப்பு செய்யபட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்,



போலீஸ் அக்கா செயலி மூலமாக கல்லூரி முழுவதும் கண்காணித்து வருகிறோம். மாணவிகள் மத்தியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் வெளியில் சொல்ல முடியாத சூழல் உருவாவதோடு மன அழுத்தம் ஏற்படும்.

காவல் நிலையம் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும். அதற்காக போலீஸ் அக்கா மூலமாக கருத்து தெரித்து அப்பிரச்சனையை சுமூகமாக முடித்து கொள்ளலாம்.



ஒரு இளைஞன் மாணவியை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டினால் மாணவி, தனக்கு போலீஸ் அக்கா-வைத் தெரியும் என கூறுவதோடு போலிஸ் அக்கா செயலி மூலமாக பிரச்சனையை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதற்காக செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காவல்துறையில் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிவிரைவுப்படை, மோப்பநாய் பிரிவு, கனரக வாகன ஓட்டுநர்கள் என அனைத்து துறைகளில் பணிபுரிகின்றனர். மேலும் பெண்கள் கண்டிப்பாக கல்வி பயில வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்,



கல்லூரி மாணவிகளுக்கு கடந்த ஒரு வருடமாக போலீஸ் அக்கா செயலி மூலம் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி வருகிறோம். கோவை மாநகரில் அல்லது கிராமப்புறங்களில் பயிலும் மாணவ, மாணவிகளுக்களை அவர்களை பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

மேலும் இடைநிற்றலை தடுப்பதற்காக மாணவ மாணவிகளை பள்ளிகளில் சேர்த்து வருகிறோம். கடந்த வருடம் சுமார் 150 மாணவ மாணவிகளை பள்ளிகளில் சேர்த்துள்ளோம். இந்த வருடம் 62 மாணவ மாணவிகளை சேர்த்துள்ளோம்.

பள்ளிகளில் படிப்பதற்கு ஏதேனும் தேவை மற்றும் பிரச்சனை என்றால் அவற்றை போலீஸ் அக்கா மூலம் சரி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

நேற்று நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்தில் வாரண்டுகாக மனைவியுடன் ஒருவர் நீதிமன்றத்திற்கு வருகிறார். காவல்துறையினர் அவரை நீதிபதியிடம் ஆஜர்படுத்துவதற்காக அழைக்கும் போது தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் மனைவியின் பையில் இருந்த கத்தியை எடுத்து கையில் காயம் ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே காவலர்கள் பிடித்து நீதிபதி முன் ஒப்படைத்தார்கள். பிடியாணையை திரும்ப வாங்குவதற்காக வந்தவர் கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஓடியுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் பெண்கள் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. தவிர தமிழக அரசு உத்தரவின் படி காவலர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். ஏற்கனவே இருப்பது போல பெண்களுக்கும் மாணவர்களுக்கும் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...