மணிப்பூரில் பெண்கள் மீதான வன்கொடுமையை கண்டித்து திருப்பூரில் பெண் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்து திருப்பூரில் பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த கலவரத்தின் போது பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.



இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, திருப்பூர் மாவட்ட பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் பங்கேற்று மணிப்பூர் கலவரத்தில் பெண்களை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...