திருப்பூரில் கனமழை - பல்லடம் சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதி!

திருப்பூர் மாவட்டத்தில் இன்று பரவலாக கன மழை பெய்த நிலையில், கனமழை காரணமாக, திருப்பூர் - பல்லடம் சாலை நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் மழைநீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீரும் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.



திருப்பூர்: கனமழை காரணமாக பல்லடம் சாலை நொச்சிப்பாளையம் பிரிவு பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நின்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.



திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டுக்குட்பட்ட, திருப்பூர் பல்லடம் சாலை, நொச்சிப்பாளையம் பிரிவு மூலக்கடை பகுதியில், இன்று பெய்த கனமழை காரணமாக, தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது.



மேலும் மழைநீர் வடிந்து செல்ல போதிய வடிகால் வசதி இல்லாததால், மழைநீருடன் சேர்ந்து சாக்கடை நீரும் கலந்து சாலையில் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.



மேலும், மழைக்காலம் தொடங்க உள்ளதால் நோய்த்தொற்று ஏற்படவும் வாயப்புள்ளதாக கூறிய அப்பகுதிமக்கள் நீண்டநாள் பிரச்சனையாக உள்ள மழைநீர் வடிகால் அமைத்து தண்ணீர் வடிந்து செல்லும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...