தாராபுரத்தில் ரூ.1.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ்!

தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் புதிதாக சாலை அமைத்தல் மற்றும் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.



திருப்பூர்: தாராபுரத்தில் 1.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் நலத்திட்ட பணிகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அடிக்கல் நாட்டினார்.



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், சுமார் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கவுண்டச்சி புதூர் ஊராட்சி, நல்லாம்பாளையம் ஊராட்சி, பொம்மநல்லூர் ஊராட்சி, உள்ளிட்ட தாராபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் புதிதாக சாலை அமைத்தல் மற்றும் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட மக்கள் நல திட்ட பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் சன்பாலு, ஆரோன் செல்வராஜ், கவுண்டச்சிபுதூர் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரமேஷ், அரசு அதிகாரிகள் பானுப்பிரியா, குருநாதன், ரஞ்சித், ஜெயந்தி இசக்கிமுத்து, நாச்சி முத்து உள்ளிட்ட அரசு அதிகாரிகள், திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...