அலங்கியம் அரசு பள்ளி மாணவர்களுக்கு புகையிலை மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு!

தாராபுரத்தை அடுத்த அலங்கியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில், மாணவ மாணவியர்களுக்கு புகையிலை மற்றும் போதை தடுப்பு குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் அலங்கியம் அரசு பள்ளி மாணவர்களுக்கு புகையிலை மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



தாராபுரத்தை அடுத்த அலங்கியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு புகையிலை மற்றும் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில், வட்ட சட்ட பணிக்குழு தலைவரும் தாராபுரம் சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உளவியல் ஆலோசகர் கௌதம் நடராஜன், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு புகை மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகளை குறித்து தெளிவாக விளக்கி கூறினார்.



மேலும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் பயன்படுத்துபவரின் உடல் நலம் மட்டும் கெடாமல் தன்னை சுற்றி இருப்பவர்களின் உடல் நலம் பாதிப்படையும். எனவே புகையிலை மற்றும் போதைப் பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க மாணவ மாணவியர்கள் முன் வர வேண்டும் என தெரிவித்தார்.



வட்ட சட்டை பணிக்குழு தலைவரும் தாராபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான தர்ம பிரபு கூறுகையில்:- சட்டம் என்றால் என்ன என்பதையும், புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் பயன் படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போக்சோ சட்டம் குறித்தும் மாணவ மாணவியர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் மிகவும் தெளிவாக எடுத்து கூறினர்.



அலங்கியம் காவல்துறை உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜ் கூறுகையில் இன்றைய இளைய சமுதாயம் அழிந்து வருவதற்கு காரணம் போதை பொருட்கள் மட்டுமே எனவே புகையிலை மற்றும் போதைப் பொருள் இல்லாத இளைய சமுதாயத்தை உருவாக்க மாணவ மாணவியர்கள் முன் வர வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வட்ட சட்டை பணிக்குழு தலைவரும் சார்பு நீதிமன்ற நீதிபதியுமான தர்ம பிரபு, உளவியல் ஆலோசகர் கௌதம் நடராஜன்,அலங்கியம் காவல்துறை உதவி ஆய்வாளர் சுந்தர்ராஜன், அலங்கியம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொண்ணு சாமி, ஆசிரியர்கள் அழகர்சாமி, முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து நிகழ்ச்சியில் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...