தூய்மை இந்தியாவை வலியுறுத்தி கோவையில் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே தூய்மை இந்தியாவை வலியுறுத்தி பி.பி.ஜி. செவிலியர் கல்லூரி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், எரிபொருள் சிக்கனம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.


கோவை: தூய்மை இந்தியாவை வலியுறுத்தி கோவையில் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பாக விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

கோவையில் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பாக நடைபெற்ற தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணியை கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சரவணன் துவக்கி வைத்தார்.

இதில் பி.பி.ஜி.செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், எரிபொருள் சிக்கனம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.



இந்த பேரணியானது, கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முன்பாக துவங்கி வ.ஊ.சி மைதானத்தை வந்தடைந்தது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் தூய்மை இந்தியாவை ஆதரிப்போம், செழுமையுடன் வாழ்வோம் உள்ளிட்ட முழக்கங்களோடு ஊர்வலமாக சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...