தாராபுரத்தில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி - மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது!

திருப்பூர் மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் மொழியின் பெருமிதத்தை உணர்த்தும் விதமாக மாபெரும் தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி தாராபுரம் பிஷப் நர்சிங் கல்லூரியில் ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.



திருப்பூர்: தாராபுரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழ் மொழியின் பெருமிதத்தை உணர்த்தும் மாபெரும் தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில், கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சிகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

நமது தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும், இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக, தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சார்பில், இந்த பரப்புரை திட்டம் நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் தமிழ் மரபும் - நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் கல்விப் புரட்சி ஆகிய தலைப்புகளின் கீழ் சொற்பொழிவுகள் மாவட்டம் தோறும் நடத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் பண்பாட்டு பரப்புரை நிகழ்வு தாராபுரம் பிஷப் நர்சிங் கல்லூரியில், திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சமூகச் செயற்பாட்டாளர் ஓவியா ”புதிய பெண்ணே வா” என்ற தலைப்பில், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சொற் பொழிவாற்றினார்.

இந்நிகழ்ச்சி குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் கூறியதாவது,



திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் பண்பாட்டு பரப்புரை நிகழ்வு மூன்றாம் கட்டமாக இங்கு நடைபெறுகிறது. மாணவர்கள் வகுப்பறையை தாண்டி வித்தியாசமான ஒரு பேச்சுக் கேட்கும் ஆர்வத்தை பார்க்க முடிகிறது.

இன்றைக்கு அது இருக்கும் வெற்றிகரமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. திருப்பூர் மாவட்டத்திற்கு பேச்சாளர்கள் வருகை புரிந்தது சிறப்பான நிகழ்வு. அதே போல் நிறைய சிறப்பான பேச்சாளர்கள் திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து மாணவ, மாணவியர்கள் மத்தியில் கருத்துறையாற்ற வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளர்கள் ஆக்கும் வகையில், திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டமான, நான் முதல்வன் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அது மட்டுமல்லாமல் புதுமைப்பெண் திட்டத்தையும் மாணவிகள் சிறப்பாக பயன்படுத்தி படித்து முன்னேற வேண்டும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமூகச் செயற்பாட்டாளர் ஓவியா “புதிய பெண்ணே வா” என்ற தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவுரையில் கூறியதாவது,



திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் புதிய பெண்ணே வா என்ற தலைப்பில் கருத்துறை ஆற்ற வாய்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, மாணவர்களாகிய உங்களுக்கு நம்முடைய வரலாற்றையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் புரிந்து கொள்வதற்காக இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 

புதிய பெண்ணே வா என்பதன் விளக்கம் உங்களை பற்றி சிந்திக்காமல் சமூதாயத்தை பற்றி சிந்திப்பது ஆகும். புதுமைப் பெண் என்பது ஒவ்வொரு பெண்களுக்கு உண்டான பிரச்சனைகளும் சமூகத்தில் ஆண்களின் பிரச்சனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக பேசப்படும் ஒவ்வொரு சொற்களும் ஆண்களுக்கும் உரியது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். 

புதுமை பெண்ணே வா என்ற தலைப்பு எவ்வளவு தூரம் பெண்களுக்காக சொல்லப்படுகிறதோ அதே அளவு மாணவர்களாகிய உங்களுக்கும் தொடர்புடையது. பெண்களின் பல பிரச்சனைகளுக்கு சமூக வலைதளங்கள் காரணமாக இருக்கிறது. நமது நாட்டில் பல தலைவர்களின் சீறிய முயற்சியால் எல்லாருக்கும் கல்வி தரவேண்டும் என போராடினார்கள்.

அதன் விளைவாக இன்று கல்வி அனைவருக்கும் சமம். கல்வி ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் சமம் என பல தலைவர்களின் போராட்டத்தின் விளைவாக தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் உயர்ந்த பதவிகளில் இருந்து வருகிறார்கள். 

தன்னைப்பற்றி யோசிக்காமல் சமூதாயத்தை பற்றி யோசிப்பவர்கள் தான் புதுமை பெண்கள். இந்த உலகில் ஆண்களுக்கு என்ன உரிமைகள் இருக்கிறதோ அந்த உரிமை பெண்களுக்கும் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். 



இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த சுமார் 1150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான கையேடும், தமிழ்ப் பெருமிதம் என்கின்ற கையேடும் வழங்கப்பட்டது. 



இதில் தமிழ்ப் பெருமிதம் கையட்டில் உள்ள ஏதேனும் ஒரு பக்கத்தில் உள்ள தகவல் குறித்து ஒரு நிமிடத்தில் தங்களுடைய சிறப்பான கருத்துக்களை தெரிவித்த மாணவ, மாணவிகளை பாராட்டி பெருமித செல்வன் மற்றும் பெருமித செல்வி என்கின்ற பட்டம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், பிஷப் நர்சிங் கல்லூரி முதல்வர் கிறிஸ்டி மேகலா, பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...