நடிகர் சத்யராஜின் தாயார் மரணம் - திரையுலகினர் இரங்கல்!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசித்து வந்த நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் (94) வயது மூப்பு காரணமாக இன்று மாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசித்து வந்த நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக இன்று மாலை உயிரிழந்தார்.



நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 94. இவர் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசித்து வந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக இன்று மாலை காலமானார்.

நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மற்றும் ரூபா சேனாதிபதி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இச்செய்தியை அறிந்த ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்து விமானம் மூலம் நடிகர் சத்தியராஜ் கோவைக்கு வந்தார்.



இதனையடுத்து, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். அவருடன் அவரது மகனும் நடிகருமான சிபிராஜ் வந்துள்ளார். இந்நிலையில், சத்யராஜின் தாயார் மறைவுக்கு பல்வேறு திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...