நிலுவை தொகையை வழங்க கோரி திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள், நிலுவை ஊதிய தொகையினை வழங்க வேண்டும், அவுட்சோர்சிங் முறையினை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



திருப்பூர்: நிலுவை ஊதிய தொகையினை வழங்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், வெள்ளகோவில், காங்கேயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை மற்றும் திருமுருகன் பூண்டி உள்ளிட்ட 6 நகராட்சிகளில் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் அவுட்சோர்சிங் முறையில் பணி மாற்றம் செய்த பிறகு மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை. கடந்த இரண்டு மாதங்களாக நிலுவை ஊதிய தொகை கூட வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது.



உடனடியாக நிலுவை ஊதிய தொகையினை வழங்க வேண்டும், அவுட்சோர்சிங் முறையினை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும், பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.



இந்நிலையில் இன்று 6 நகராட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிராக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்தில் தொடர போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...