கோவையில் சாப்பிடுவதற்கு அழைத்துச் சென்று ஈரான் நாட்டு பெண்ணை கட்டாயப்படுத்தி மதுகுடிக்க வைத்து மிரட்டல் - 2 இளைஞர்கள் கைது

புகாரின் பேரில் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து ஈரான் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ராஜூ, ஜோன் பிரான்சிஸ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.



கோவை: ஈரான் நாட்டை சேர்ந்தவர் 37 வயது இளம்பெண். இவர் பி.பார்ம் பிசியோதெரபி படித்து முடித்து விட்டு மும்பையில் தங்கி இருந்தார். அப்போது இவருக்கு கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் ஈரான் பெண்ணை கோவைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரான் பெண் கோவை வந்தார்.

பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் வேலை தேடி வந்தார். தோழி மூலமாக ஈரான் பெண்ணுக்கு புதுசித்தாபுதூரை சேர்ந்த ராஜூ (32) என்பவர் அறிமுகம் ஆனார். 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

நேற்று இரவு ராஜூ, ஈரான் பெண்ணை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு கிளப்பிற்கு சாப்பிடுவதற்காக அழைத்தார். இளம்பெண்ணும் அங்கு சென்றார். அங்கு ராஜூவுடன் அவரது நண்பர் குன்னூரை சேர்ந்த ஜோன் பிரான்சிஸ் (40) என்பரும் வந்து இருந்தார். அங்கு ராஜூவும், ஜோன் பிரான்சிசும் மது குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த 2 பேரும் ஈரான் பெண்ணை மது குடிக்க அழைத்தனர். ஆனால் à®…வர் மதுகுடிக்க மறுத்து விட்டார்.

இதனையடுத்து 2 பேரும் கட்டாயப்படுத்தி ஈரான் பெண்ணை மது குடிக்க வைத்தனர். பின்னர் 2 பேரும் சேர்ந்து ஈரான் பெண்ணிடம் போதையில் தவறாக நடக்க முயன்றனர். அதிர்ச்சியடைந்த இளம்பெண் கிளப்பை விட்டு வெளியே வந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த 2 பேரும் நடுரோட்டில் வைத்து தகாத வார்த்தைகளால் பேசினர். இது குறித்து ஈரான் பெண் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து ஈரான் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ராஜூ, ஜோன் பிரான்சிஸ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...