கடலூரில் நில அளவையரை செருப்பால் அடித்த முன்னாள் கவுன்சிலரை கைது செய்யக்கோரி கோவையில் நில அளவையர்கள் ஆர்ப்பாட்டம்!

கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் குறுவட்ட அளவர் மகேஸ்வரனை செருப்பால் தாக்கிய முன்னாள் கவுன்சிலர் சீத்தாபதியை கைது செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நில அளவையர் ஒன்றிப்பு சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கடலூரில் நில அளவையரை செருப்பால் அடித்த முன்னாள் கவுன்சிலரை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் குறுவட்ட அளவர் மகேஸ்வரன் என்பவரை காவல்துறை பாதுகாவலர் முன்னிலையில் அரசு பணி செய்ய விடாமல் தடுத்த முன்னாள் கவுன்சிலர் சீத்தாபதி அவரை செருப்பால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் கவுன்சிலர் சீத்தாபதியை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட தலைவர் நிலமன் கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் துணைத் தலைவர் அசோக் பொருளாளர் வேல்முருகன் இணை செயலாளர் சுரேந்திரன் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சீத்தாபதியை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...