தடாகம் அருகே பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது!

தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 2 கல்லூரிகள் மற்றும் 10 பள்ளிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



கோவை: கோவை தடாகம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளிடையே போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 2 கல்லூரிகள் மற்றும் 10 பள்ளிகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் தலைமையில் மாணவ மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.



மேலும் கணுவாய் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடங்கள் நடைபெற்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...