நடிகர் சத்யராஜின் தாயார் உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு, எம்.பி ஆ.ராசா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்

நடிகர் சத்யராஜின் தாய் நாதாம்பாள் நேற்று மாலை உயிரிழந்த நிலையில் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள சத்யராஜின் இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.



கோவை: நடிகர் சத்யராஜ் தாயார் உடலுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் நேற்று மாலை உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள சத்யராஜின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

நாளை காலை உடல் ஆவாரம்பாளையம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ள சூழலில் இன்று காலை அவரது உடலுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



அதைத்தொடர்ந்து நீலகிரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா மற்றும் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா திமுக தலைமை சார்பிலும் முதலமைச்சர் சார்பிலும் சத்யராஜ் தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்ததாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...