மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு முகாம் - 245 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்..!

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தகுதியுள்ள 245 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பணி நியமன ஆணை வழங்கினார்.


கோவை: மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற 483 பேரில் 245 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பணி நியமன ஆணை வழங்கினார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஷேசயர் தன்னார்வ அமைப்பு இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.

இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 37க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்ய வந்தன.

இம்முகாமில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில் முனைவோர்களுக்கான ஆலோசனை, மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. முகாமில் மொத்தம் 483 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

இதில், 245 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பணி நியமன ஆணையை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...