உடுமலையில் உலக சாதனைக்காக பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் கோலாகலம்..! - 2000 கலைஞர்கள் பங்கேற்று அசத்தல்

உடுமலை அருகே உலக சாதனைக்காக நடைபெற்ற பவளக்கொடி வள்ளி கும்மியாட்டத்தில் இராண்டாயிரம் கலைஞர்கள் கலந்துகொண்டு உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடினர்.



திருப்பூர்: அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒன்றாக பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த அசத்தல் ஆட்டத்தை ஏராளமானோர் ஒன்றுகூடி ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மலையாண்டி கவுண்டனூர் பகுதியில் சக்தி கலைக்குழுவின் பொன்விழா அரங்கேற்றத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்வாக சுமார் 2000 கலைஞர்கள் பங்குபெறும் பவள கொடி கும்மியாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.



அழிந்து வரும் பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சக்தி கலை குழு ஆசிரியர் மகாலிங்கம் தலைமையில் பள்ளியொன்றில் நடைபெற்ற பள்ளி கும்மி ஆட்டத்தில் நாட்டுப்புற பாடல்கள், பாரதிதாசன், பாரதியார் பாடல்கள், திரைப்பட தத்துவ பாடல்கள் உட்பட கருத்துமிக்க பாடல்கள் இடம்பெற்றன.



குறிப்பாக ஆண்கள், பெண்கள் அனைவரும் காலில் சலங்கை கட்டி பவளக்கொடி வள்ளி கும்மி ஆட்டம் ஆடி அசத்தினர்.



உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடிய வள்ளி கும்மி ஆட்டத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், ஈஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகராட்சி முன்னாள் தலைவர் சி வேலுச்சாமி, சக்தி கலைகுழு ஆசிரியர் மகாலிங்கம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சி தலைவர் கருப்பாயி, ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகன வள்ளி ராஜசேகரன், ரயில்பயணிகள் ஆலசோணை குழு உறுப்பினர் உடுமலை சத்யம் பாபு, உடுமலை ஓன்றிய துணை செயலாளர் உரல்பட்டி சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...