மாலைநேரத்தில் மலைப்பாதையில் உலாவிய இரண்டு காட்டு யானைகள் – மக்கள் வெளியிட்ட வீடியோ காட்சிகள் வைரல்

கோவை பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்று மாலை இரண்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கோவிலுக்கு செல்லக்கூடிய மலை பாதையை கடந்து அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.



கோவை: பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்று மாலையில் இரண்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றன.

இந்த நேரத்தில் பக்தர்கள் நடைபணமாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் மாங்கரை அடுத்துள்ள பெரிய தடாகம் பகுதியில் தற்போது யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. கோடை வெயில் தனிந்த நிலையில் கேரள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் தமிழக வனப்பகுதியை ஒட்டியுள்ள மாங்கரை பெரிய தடாகம், பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளது.

இந்த யானைகள் மருதமலை மற்றும் பெரிய தடாகம், பகுதியில் மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது.



இந்நிலையில் பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் நேற்று மாலை சுமார் 5.30 மணி அளவில் இரண்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லக்கூடிய மலை பாதையை கடந்து அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றன.



இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மாலை நேரம் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி இந்த யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வர துவங்கி இருக்கலாம் எனவும் பக்தர்கள் மாலை 4 மணிக்கு மேல் மலை பாதை வழியாக நடந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...