பெண் கவுன்சிலர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு விழுந்த விவகாரம் – 5 பேரை பிடித்து சிறையில் தள்ளிய போலீசார்

கோவையில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த பெண் கவுன்சிலர் சித்ரா மற்றும் அவரது குடும்பத்தினரை ஒரு மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவெட்டு தப்பிச்சென்றது. இடத்தகராறு பிரச்சனையில் கவுன்சிலரை தீர்த்துக்கட்ட துணிந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: இடத்தகராறு பிரச்சனையில் மர்ம கும்பல் வெட்டிய அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த பெண் கவுன்சிலர் அவரது, கணவர் மற்றும் மகன் ஆகிய மூன்று பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மலுமிச்சம்பட்டி ஊராட்சி மன்ற பெண் கவுன்சிலர் மற்றும் குடும்பத்தினரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கொண்ட கும்பலை செட்டிபளையம் போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா. திமுகவைச் சேர்ந்த இவர், மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் 3 வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார்.

நேற்று முன் தினம் இரவு சித்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்தபோது, திடீரென முகமூடி அணிந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல், சித்ரா மற்றும் அவரது கணவர் ரவிக்குமார், மகன் மோகன் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

மூவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் மூவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை செய்த போது, சித்ராவிற்கும் வேறு ஒருவர் நபருக்கும் இருந்த இடத்தகராறு காரணமாக ராஜன் மூலம் அடியாட்களுடன் வந்து சித்ரா மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து தலைமறைவாக இருந்த ராஜன் (23), முத்துப்பாண்டி (24), முகேஷ்கண்ணன் (22), பிச்சை பாண்டி (23), ஶ்ரீரக்சித் (18) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...