திரை உலகில் 64 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் கமலஹாசன் - கோவையில் போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்

திரையுலகில் நடிகர் கமலஹாசன் 64வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் கமலஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் படம் வரை அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.



கோவை: வாக்கு வங்கியை அதிகமாக வைத்துள்ள நடிகர் கமலஹாசனுக்கு அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பாராட்டு தெரிவித்துள்ளனர். கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான படம் முதல் கடைசி படம் வரை போஸ்டர் அடித்து அவர்கள் அமர்களப்படுத்தியுள்ளனர்.

திரை உலகில் உலகநாயகன் என போற்றப்படும் நடிகர் கமலஹாசன், முதன்முதலில் நடத்து வெளியான திரைப்படம் களத்தூர் கண்ணம்மா. இந்த திரைப்படம் 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியானது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல்வேறு படங்களை கடந்து கதாநாயகனாக பல்வேறு வெற்றி படங்களை தந்தவர் கமலஹாசன்.

மேலும் இந்திய சினிமாவில் பல்வேறு புதிய புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்ததிலும் இவருக்கு தனி பங்கு உண்டு. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், நடன கலைஞர், பாடகர் என பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கி வருபவர் கமலஹாசன். இந்நிலையில் களத்தூர் கண்ணம்மா திரைப்படம் வெளியாகி 63 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.



எனவே நடிகர் கமலஹாசன், திரை உலக வாழ்வில் 63 ஆண்டுகளைக் கடந்து 64 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை பாராட்டும் வகையில் கோவை 80 வது வார்டு கமலஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த போஸ்டரில் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படம் முதல் கடைசியில் வெளியான விக்ரம் படம் வரை அவரது கதாப்பாத்திரத்தின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை மாநகரில் லங்கா கார்னர், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...