தலையில் கல்லைப்போட்டு பெயிண்டர் கொலை - குடிக்க பணம் தராததால் ஆத்திரம்…!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பிரிவு பகுதியில் தலையில் கல்லைப் போட்டு மாரிதுரை என்ற பெயிண்டர் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிக்க பணம் கொடுக்காத ஆத்திரத்தில் பெயிண்டரை சக்திவேல் என்ற இளைஞர் கொலை செய்தார்.


கோவை: குடிக்க பணம் தர மறுத்த பெயிண்டரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சக்திவேல் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மாரிதுரை மற்றும் சக்திவேல். கோவையில் வசித்து வரும் 50 வயதான மாரிதுரையும் 19 வயதான சக்திவேலும் ஒரே ஊர் என்பதால் இருவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இருவருக்குமே குடிப்பழக்கமும் இருந்துள்ளது. இதில் பெயிண்ட்டராக உள்ள மாரிதுரை சாலை ஓரம் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வீரபாண்டி பிரிவு பகுதியில் குடிபோதையில் வந்த சக்திவேல் ஏற்கனவே போதையில் இருந்த மாரிதுரையிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். மாரிதுரை தர மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் அருகில் கிடந்த கல்லை எடுத்து மாரிதுரையின் தலை மற்றும் முகத்தில் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மாரிதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மாரிதுரையை கொலை செய்த சக்திவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...