இளைஞர் காங்கிரஸ் சார்பில் ‘சக்தி சூப்பர் பெண்’ என்ற புதிய திட்டத்தின் பதாகை வெளியீடு!

கோவை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 'சக்தி சூப்பர் பெண்' (SHAKTHI SUPER SHE) என்ற திட்டத்தின் பதாகையை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் வெளியிட்டார்.



கோவை: 'சக்தி சூப்பர் பெண்' என்ற திட்டத்தின் பதாகையை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் வெளியிட்டார்.

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள "சக்தி சூப்பர் பெண்" (SHAKTHI SUPER SHE) என்ற திட்டத்தின் பதாகை கோவை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.



இந்த நிகழ்வில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் பதாகை வெளியிட்டார்.



மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் காயத்ரி ராஜ முரளி சாந்தாமணி பச்சைமுத்து முன்னிலையில் வைத்தனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீநிதி பிரேம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,



காங்கிரஸ் கட்சியில் பெண்களின் ஆளுமை திறனை வெளிப்படுத்தும் விதமாகவும், அவர்களின் தலைமை பண்பை மேம்படுத்தும் விதமாகவும், சூப்பர் சக்தி சூப்பர் பெண் என்ற இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் உள்ள மகளிர் மட்டுமின்றி கட்சியில் இல்லாத பெண்களும் இணையலாம்.

இந்நிகழ்ச்சியில் தேசிய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...