மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் பலி - கோவில் வளாகத்தில் உயிரை விட்டதால் பக்தர்கள் சோகம்

கோவையில் ஆடி மாதத்தையொட்டி கோவில் திருவிழாவின் போது, அன்னதானம் போடுவதாக ஒலிப்பெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்த தூய்மை பணியாளர் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: ஆடி மாத திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை உக்கடம் சி.எம்.சி.காலனி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்து மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் இன்று விழாவின் ஒரு பகுதியாக அன்னாதானம் நிகழ்ச்சி இன்று மதியம் நடைபெற இருந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் மகேந்திரன் என்ற இளைஞர் ஒலிப்பெருக்கி மூலம் அன்னதானம் குறித்து தகவல் தெரிவித்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின் கசிவு காரணமாக ஒலிப்பெருக்கியில் அதிகப்படியான மின்சாரம் பாய்ந்ததில் கோவில் வளாகத்திலேயே தூக்கி வீசப்பட்டு மகேந்திரன் மயக்கடைந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.



பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலே மகேந்திரன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் சம்பவம் குறித்து தகவலறிந்த உக்கடம் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் உயிரிழந்த மகேந்திரன் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வருவதாகவும், அவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ள சூழலில் இன்றைய அன்னதானத்திற்கு அவர் தான் சமையல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அனைத்து பணிகளையும் முன் நின்று செய்த இளைஞர் கோவில் வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...