கவுண்டம்பாளையம் அருகே திமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கவுண்டம்பாளையத்தில் திமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் 5 இடங்களில் நடைபெற்றது. இதில், திராவிட மாடல் ஆட்சியின் சமூக நீதி, சமத்துவம், மொழிப்பற்று, மாநில உரிமை மற்றும் தொலைநோக்கு குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.



கோவை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றன.



கவுண்டம்பாளையம் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கவுண்டம்பாளையம் பகுதி திமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் 5 இடங்களில் நடைபெற்றது.



இதற்கு பகுதி செயலாளர் ஜெ.எஸ்.சரத் விக்னேஷ் தலைமை வகித்தார். பகுதி துணை செயலாளர் சங்கர் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த தெருமுனைப்பிரச்சார கூட்டங்கள் 33வது வார்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் பேக்கரி அருகே தொடங்கியது.

தொடர்ந்து 17வது வார்டு அசோக் நகர் கீழ் பகுதி, 34வது வார்டு மீனாட்சி அம்மன் நகர், 35வது வார்டு இடையார்பாளையம் சந்திப்பு மற்றும் 16வது வார்டு டி.வி.எஸ் நகர் ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி மற்றும் சிறப்பு பேச்சாளர் காரமடை நகர துணைச் செயலாளர் நாகநந்தினி ஆகியோர் சிறப்புரையாற்றினார்.



இந்த கூட்டத்தில் 33, 17, 34, 35, 16 வார்டுகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுபஸ்ரீ சரத், மாலதி, சம்பத் மற்றும் தமிழ்ச்செல்வன், நிர்வாகிகள் சண்முகசுந்தரம், வசந்தகுமார், ஈஸ்வரன், கண்ணகி, சுனில்குமார், பிரபாகரன், கல்யாணசுந்தரம், வெற்றிவேல், வார்டு செயலாளர்கள் தன்ராஜ், குட்டி (எ) வேலுச்சாமி, காளிதாஸ், குமரேசன், ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த கூட்டத்தில் திராவிட மாடல் ஆட்சியின் சமூக நீதி, சமத்துவம், மொழிப்பற்று, மாநில உரிமை மற்றும் தொலைநோக்கு குறித்து பேசினர்.

இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் டி.பி.சுப்ரமணியன், தொடர்ந்து 17வது வார்டு அசோக் நகர் கீழ் பகுதி, 34வது வார்டு மீனாட்சி அம்மன் நகர், 35வது வார்டு இடையார்பாளையம் சந்திப்பு, முருகேசன், செந்தில்குமார், ஞானசேகரன், செந்தில்குமார், தாமோதரன், சுந்தரம், இந்திராணி, அன்னக்கொடி, மயில்சாமி, ஸ்ரீதர், ரவிக்குமார், பெனட் பிரேம்குமார், சுதா, சங்கர் உட்பட மாவட்ட, பகுதி, ஒன்றிய, பேரூர், வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், பாகநிலை முகவர்கள், மூத்த முன்னோடிகள், செயல்வீரர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...