சோமையனூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது - ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்!

கணுவாய் அடுத்த சோமையனூர் பகுதியில் சுற்றித்திரிந்த கஞ்சா விற்பனையாளர் ராஜகணேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்த தடாகம் போலீசார், அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கணுவாய் அடுத்த சோமையனூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாரயணன் போதைப் பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்.

இந்த நிலையில் கோவை தடாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தடாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் மற்றும் காலவர்கள் கணுவாய் அருகே சோமையனூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிக் கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் விருதுநகரை சேர்ந்த ராஜகணேஷ் என்பதும் கோவை சரவணம்பட்டியில் தங்கி கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரது வீட்டை சோதனையிட்ட போலீசார் அங்கிருந்து, சுமார் ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த தடாகம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...