கோவை கிழக்கு, தெற்கு மண்டலங்களில் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு!

கோவை தெற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும்‌ தூய்மை பணிகள்‌, கிழக்கு மண்டலத்தில்‌ ரூ.3.54 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌ மழைநீர்‌ வடிகால்‌ அமைத்தல், புதிய தார்‌ சாலை‌ பணிகள்‌ உள்ளிட்ட வளர்ச்சி திட்ட‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை கிழக்கு மற்றும் தெற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.91க்கு உட்பட்ட பழனியப்பா நகர்‌, குளத்துப்பாளையம்‌ பகுதியில்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள்‌ மக்கும்‌ குப்பை மற்றும்‌ மக்காத குப்பைகளை தரம்‌ பிரித்து சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ குப்பைகளை மக்கும்‌ குப்பை, மக்கா குப்பைகள்‌ என வகைப்படுத்தி தரம்‌ பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தூய்மை பணியாளா்களுக்கு அறிவுரை வழங்கினார்‌.



அதனை‌ தொடர்ந்து, அப்பகுதியில்‌ டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்‌ குறித்து பணியாளர்களிடம்‌ கேட்டறிந்து, கொசு ஒழிப்பு பதிவேடுகள்‌, கொசு ஓழிப்பு புகை மருந்து அடிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டு வருவதை‌, ஆய்வு செய்தார்.

மாநகராட்சி கொசு ஓழிப்பு பணியாளார்கள்‌ வீடுவீடாக‌ சென்று அபேட்‌ மருந்தை தொட்டிகளில்‌ ஊற்றவும்‌, தேவையில்லாத பொருட்களை அகற்றி, பொது மக்கள்‌ தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில்‌ கொசுப்‌ புழுக்கள்‌ உள்ளனவா என்பதை கண்டறியும்‌ பணிகளில்‌ ஈடுபடுமாறு அறிவுரை வழங்கினார்‌.



பின்னர்‌, பழனியப்பா நகா்‌, குளத்துப்பாளையம்‌ பகுதியில்‌ உள்ள மழைநீர்‌ வடிகால்‌ தூர்வாரும்‌ பணி நடைபெற்றுவருவதையும்‌,



வார்டு எண்‌.91-க்குட்பட்ட குளத்துப்பாளையம்‌ சாலை வழியாக பாலக்காடு பிரதான சாலை சென்றடைய 110 மீட்டார்‌ நீளத்திற்கு தனியார்‌ நில எடுப்பு மற்றும்‌ சாலை அகலப்படுத்த கருத்துரு அனுப்பப்பட்ட இடத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



அதனைத்‌ தொடாந்து, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.24க்குட்பட்ட டைட்டில்‌ பார்க்‌ சாலையில்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ ரூ.149.90 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ மழைநார்‌ வடிகால்‌, புதிதாக தார்‌ சாலை அமைத்தல்‌, சாலை தடுப்பு (சென்டா்‌ மீடியன்‌) பகுதிக்கு அபிவிருத்தி பணிகள்‌ செய்தல்‌ மற்றும்‌ சாலையின்‌ இருபுறங்களிலும்‌ உள்ள நடைபாதை தளங்களுக்கு அபிவிருத்தி பணிகள்‌ செய்தல்‌ உள்ளிட்ட திட்டப்பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



பின்னர்‌, கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.8-க்குட்பட்ட காளப்பட்டி சாலையில்‌ 15வது நிதிக்குழு தேசிய சுகாதார பணி திட்டத்தின்கீழ்‌, ரூ.28 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்டு வரும்‌ நகா்ப்புற சுகாதார நல மைய கட்டுமான பணியினை மாநகராட்சி ஆணையாளர்‌‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு, பணியினை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவும்‌, சுற்றுச்சுவர்‌ அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரிக்கவும்‌ அறிவுறுத்தினார்‌.



அதனைத்‌ தொடர்ந்து, வார்டு எண்‌.8-க்குட்பட்ட காளப்பட்டி சாலையில்‌ புதிதாக அங்கன்வாடி மையம்‌ கட்டப்படவுள்ள இடத்தினை மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு, அப்பகுதியில்‌ பயன்பாட்டில்‌ இல்லாத கிணற்றை உடனடியாக மூட சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட பின்பு,



வாரடு எண்‌.7க்குட்பட்ட பழனிசாமி நாயுடு காலனியில்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.45 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ 500 மீட்டா தொலைவிற்கு தார்சாலை அமைக்கும்‌ பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



வார்டு எண்‌.56-க்குட்பட்ட சக்தி நகா்‌ பகுதியில்‌ மாநில நிதி கழக (SFC -State Financial Corporation) திட்டத்தின் கீழ் ரூ.1.31 கோடி மதிப்பீட்டில்‌ 1931 மீட்டர்‌ தொலைவிற்கு மொத்தம்‌ 11 சாலைகள்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...